ஜனாதிபதி தேர்தலின் பின் மல்வானை பகுதியில் கழிவகற்றும் பணிகள் முடக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இது அரசியல் பழிவாங்கலா? என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் கடந்த இரு வாரங்களாகக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்ற போதிலும் பிரதேச சபை உட்பட எங்கு தொடர்பு கொண்ட போதிலும் முறையான பதில் கிடைக்கவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பொலிசாருக்கும் முறையிடப்பட்டுள்ள போதிலும் பிரதேச சபைத் தலைவரைத் தொடர்பு கொள்ளும்படி பணிக்கப்படுவதாகவும் வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-NN
No comments:
Post a Comment