தமிழீழத்தை பெற்றுக் கொடுக்க முயல்கிறார் சந்திரிக்கா: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 November 2019

தமிழீழத்தை பெற்றுக் கொடுக்க முயல்கிறார் சந்திரிக்கா: மஹிந்த


பிரபாகரன் தனது ஆயுதப் போராட்டத்தினால் அடைய முடியாது போனதை சந்திரிக்கா சஜித்தின் ஊடாக செய்து கொடுப்பதற்கு முயல்வதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


பிரபகாரனுக்கு அதீத மரியாதை கொடுத்து பேசி வரும் சந்திரிக்கா தமிழீழத்தைப் பிரிக்க விரும்புகிறவர்களுடன் கை கோர்த்து செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச ஊடாக அதனைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்திலேயே மீண்டும் அரசியலில் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் தலைமையகம் சென்ற மஹிந்த அங்கிருந்த பண்டாராநாயக்க குடும்ப உறுப்பினர்களின் படங்களை அகற்றி, அன்றிலிருந்து கட்சியைப் பிளவு படுத்த ஆரம்பித்து செயற்பட்மே பெரமுனவை உருவாக்கியிருப்பதாகவும் துரோகம் செய்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் காப்பாற்றும் அமைப்பினைத் தோற்றுவித்து அண்மையில் சந்திரிக்கா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment