பிக்குகளுக்கு நாடாளுமன்றில் இடம் தரக் கூடாது: தம்மானந்த தேரர் - sonakar.com

Post Top Ad

Saturday, 23 November 2019

பிக்குகளுக்கு நாடாளுமன்றில் இடம் தரக் கூடாது: தம்மானந்த தேரர்தேசியப் பட்டியல் ஊடாகக் கூட பௌத்த பிக்குகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தரப்படக் கூடாது என தெரிவித்துள்ளார் மிஹிந்தல ரஜமகா விகாரையின் விகாராதிபதி தம்மானந்த தேரர்.


எதிர்வரும் பொதுத் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் பௌத்த பிக்குகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டையும், தேசிய உணர்வையும் பாதுகாப்பதற்கு வாக்குறுதியளித்து தேர்தலில் வென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச இது தொடர்பில் கவனம் எடுப்பார் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் ரதன தேரர் உட்பட பெரும்பாலான கடும்போக்குவாத தேரர்கள் நாடாளுமன்ற பதவியைக் குறி வைத்து இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment