கட்சித் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் உருவாகியுள்ள சர்ச்சையை கட்சி மட்டத்திலேயே பேசித் தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கிறார் அகில விராஜ் காரியவசம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால தலைவராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் 'நீண்ட' காலத்துக்கு அப்பதவியில் இருக்கும் எண்ணமில்லையென தெரிவித்துள்ளதால் தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமில்லையெனவும் அதிருப்தியாளர்கள் புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லையெனவும் அகில தெரிவிக்கிறார்.
ரணில் அதிருப்தியாளர்கள் சஜித் பிரேமதாசவை முன்நிறுத்தி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவும் தயார் என தெரிவித்துள்ள நிலையில் உட்கட்சி முரண்பாட்டைப் பேசித் தீர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment