புத்தி சுயாதீனமற்ற கோட்டா ஜனாதிபதியாக முடியாது: அமில தேரர் - sonakar.com

Post Top Ad

Friday, 8 November 2019

demo-image

புத்தி சுயாதீனமற்ற கோட்டா ஜனாதிபதியாக முடியாது: அமில தேரர்

Jl29KEy

இராணுவத்தை விட்டு விலகுவதற்காக தான் மனநிலை பாதிக்கப்பட்டவர் என சான்றிதழ் கொடுத்திருந்த கோட்டாபே ராஜபக்ச, நாட்டை எப்படி ஆள முடியும் என கேள்வியெழுப்பியுள்ளார் தம்பர அமில தேரர்.



ராஜபக்ச குடும்ப ஆட்சியை நிறுவச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்ச நியமிக்கப்பட்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். யுத்தத்தை நடாத்தியதும் இராணுவ தளபதி தான் என அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் வைத்து கோட்டாபே தெரிவித்திருந்ததையடுத்து அவரால் எழுதிக் கொடுத்தால் மாத்திரமே பேச முடியும் எனவும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இந்நிலையிலேயே, இராணுவத்தை விட்டு விலகுவதற்காக புத்தி சுயாதீனமற்றவராகக் காட்டிக் கொண்ட கோட்டா நாட்டை எப்படி ஆட்சி செய்ய முடியும் என தம்பர அமில தேரர் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment