
பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் வகையில் அமெரிக்க நீதிமன்றுக்கு தகவல் வழங்கியிருப்பதாகவும் இதனால் நாடு எதிர்காலத்தில் பொருளாதாரத் தடை போன்ற ஆபத்துகளை எதிர்நோக்குவதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் கீழ் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
லசந்த விக்ரமதுங்க கொலை விவகாரத்தின் பின்னணியில் கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலிருந்து விடுபடுவதற்காக, குறித்த கொலையானது அரசாங்கத்தின் தேவைக்காக இடம்பெற்றிருப்பதாக கோட்டா தெரிவித்திருப்பதாகவும் இது அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமையை எடுத்தியம்புவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவிக்கிறார்.
பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு கடித மூலம் இம்முறைப்பாட்டை அவர் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment