ஷக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் அத்தாவுல்லாஹ்வும் மனோ கணேசனும் தமக்குள் முறுகலில் ஈடுபட்டதன் விளையில் அத்தாவுல்லாஹ்வின் முகத்தில் மனோ கணேஷன் தண்ணீரை வீசியெறிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மலையக மக்கள் குறித்து விளித்த அத்தாவுல்லாஹ்வின் வார்த்தைப் பிரயோகத்தினால் கோபம் கொண்ட நிலையில் மனோ கணேசன் இவ்வாறு நடந்து கொண்டுள்ள அதேவேளை, நிகழ்ச்சி முழுவதுமாக இருவருக்குமிடையில் பனிப்போர் நிலவி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மலையக மக்களை தரக்குறைவாகப் பேசும் நோக்கத்துடன் பேசவில்லையாயினும் அத்தாவுல்லாஹ்வின் வார்த்தைப் பிரயோகம் தவறாக அமைந்திருந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்ற அதேவேளை மனோ கணேசனின் செயல் வரம்பு மீறியதென அத்தாவுல்லாஹ்வின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment