மேலதிக வாக்குச் சீட்டுக்கள் இல்லை: தேசப்பிரிய! - sonakar.com

Post Top Ad

Saturday 9 November 2019

மேலதிக வாக்குச் சீட்டுக்கள் இல்லை: தேசப்பிரிய!


வாக்குப் பதிவின் போது தவறிழைக்கப்பட்டு விட்டதாகக் கூறி மேலதிகமாக பயன்படுத்துவதற்கென வாக்குச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என அறிவித்துள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.



இம்முறை 35 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் நிலையில் 2 அடி நீளமான வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் பற்றியும் பேசப்படுவதனால் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர்கள் தாம் விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பின் முதலாவது நபரது பெயருக்கு எதிராக இலக்கம் 1 ஐயும் இரண்டாவது நபரின் பெயருக்கு எதிராக இலக்கம் 2 எனவும் பதிய வேண்டும். இதை விடுத்து இரு நபர்களது பெயர்களுக்கும் புள்ளடியிட்டால் அந்த வாக்குச் சீட்டு நிராகரிக்கப்படும். 

இந்நிலையில், வாக்களிப்பின் போது தவறு நேர்ந்து விட்டதெனக் கூறி மேலதிக வாக்குச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment