கோட்டாபே ராஜபக்சவின் பதவியேற்பின் போது அங்கு ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களும் சென்றிருந்த நிலையில் 'திருடர்கள் உள்ளே - நாங்கள் வெளியே இருக்கிறோம்' அவர்களை வெளியே அனுப்புங்கள் என இன்று கோட்டா ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியிருந்தனர்.
எனினும், பிரதமர் ரணில், ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க உட்பட சிரேஷ்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
சஜித் பிரேமதாசவை தீவிரமாக ஆதரித்த அமைச்சர்கள் தாம் பதவி துறந்துள்ள அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த நகர்வு எதிர்பார்க்கப்படுகின்றமையும் நாளை செவ்வாய்க் கிழமை கோட்டாபே ராஜபக்ச கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment