புதன் கிழமை இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் - sonakar.com

Post Top Ad

Monday, 25 November 2019

புதன் கிழமை இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்


இன்றைய தினம் எதிர்பார்க்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் புதனன்று இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமித்திருந்த புதிய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, பழைய அரசியல் கலாச்சாரத்தை மாற்றி புதிய வழியில் பயணிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதனன்று சுமார் 20 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு பிரதியமைச்சர் நியமனங்களும் கிடப்பில் இருக்கின்றமையும் தற்போதைய நியமனங்கள் மார்ச் மாதம் பொதுத் தேர்தல் வரையான இடைக்கால நிர்வாகத்துக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment