சஜித்துக்கு முதுகில் குத்தி விட்டார்கள்: மனோ - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 November 2019

சஜித்துக்கு முதுகில் குத்தி விட்டார்கள்: மனோ


சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிங்கள மக்களிடம் சென்று தீவிர பிரச்சாரத்தை செய்யாமல் தந்திரமாகத் தவிர்த்துக் கொண்டதன் மூலம் ரணில், சந்திரிக்கா, ராஜித மற்றும் ரவி கருணாநாயக்க போன்றோர் சஜித்தின் வெற்றிக்கு உழைக்கத் தவறி விட்டார்கள் என தெரிவித்துள்ளார் மனோ கணேசன்.ரிசாத் பதியுதீனை அவரது மாவட்டத்துக்கு வெளியே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரத்தைப் பாதித்திருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், கொழும்பில் இடம்பெற்ற முதலாவது பொதுக் கூட்டத்தில் ரிசாத் பேசும் போது கூச்சலிடவும் அதனைப் படம் பிடிக்க ஊடகம் ஒன்று தயார் நிலையில் இருந்ததாகவும் அதனாலேயே அங்கு சிறுபான்மை சமூக தலைவர்கள் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் சஜித்துக்காக பிரச்சாரம் செய்ய வேண்டிய சிலரும் எதிரணியுடன் கள்ள உறவை உருவாக்கிக் கொண்டு துரோகமிழைத்ததாகவும் மனோ தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment