முஸ்லிம்களை வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளதாக போலியாகத் தயாரிக்கப்பட்ட கடிதத் தலைப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றைய தினம் தேதியிட்டு, இன்னொரு ஐந்து வருட காலத்திற்கு இடம்பெறப்போகும் அநீதிகளுக்கு பங்களிப்பதை விட முஸ்லிம்கள் மௌனம் காப்பதே மேல் என்ற பொருளடக்கத்துடன் இக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்களிப்பை ஊக்குவித்து வரும் நடவடிக்கைகளையே தமது அமைப்பு இதுவரை செய்து வந்துள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சுட்டிக்காட்டியுள்ளமையும், முஸ்லிம்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளக் கூடாது என்ற பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்கள் ஊடாக குறிப்பிட்ட ஓரிரு நபர்களே மேற்கொண்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment