என் தந்தையைக் கொல்ல உத்தரவிட்டதும் கோட்டாபே: ஹிருனிகா (video) - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 October 2019

demo-image

என் தந்தையைக் கொல்ல உத்தரவிட்டதும் கோட்டாபே: ஹிருனிகா (video)

vyoVcSG

கோட்டாபே ராஜபக்சவினால் கொலையானோர், காணாமலாக்கப்பட்டோர் பற்றி அதிகம் பேசப்படுகிறது. அதேவேளை, அவரது இந்த கொலைக் கலாச்சாரத்தால் முதலில் பாதிக்கப்பட்டது தானே எனவும் தனது தந்தையைக் கொல்ல உத்தரவிட்டது கோட்டாபே ராஜபக்சவே எனவும் தெரிவிக்கிறார் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர.


தேர்தல் பிரச்சாரத்தின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், தமது தந்தைக்கும் மஹிந்தவுக்குமிடையில் இடைவெளி அதிகரித்ததற்கான காரணம் துமிந்த சில்வா எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் பணத்தில் மஹிந்தவின் பெற்றோர் உடுத்திய சேலை, தலைவாரிய சீப்பு, தேநீர் குடித்த கோப்பையையெல்லாம் பாதுகாக்க நினைவகம் கட்டியவர்களே மஹிந்த குடும்பம் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அவரது பேச்சடங்கிய காணொளி:

No comments:

Post a Comment