நாவலப்பிட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்சித் தாவல்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துராலியே ரதன தேரர் - இராவணா பலய போன்ற கடும்போக்கு வாதிகள் கோட்டாபே ராஜபக்சவை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து பலர் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தாவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment