ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சஜித்தை ஆதரிப்பது, கோட்டாவை ஆதரிப்பது அல்லது மௌனமாக இருப்பது என மூன்று தெரிவுகள் இருந்ததாகவும் சுதந்திரக் கட்சி கோட்டாபே ராஜபக்சவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் உயர் மட்டம் ஏகமானதாக தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மஹிந்த எதிர்ப்பு அணியினர் வேறு நகர்வை மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment