எங்கள் வாக்காளர்களை அசைக்க முடியாது: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday 11 October 2019

எங்கள் வாக்காளர்களை அசைக்க முடியாது: மஹிந்த



எத்தனை ஜனாதிபதி வேட்பாளர்களை நிறுத்தினாலும் பெரமுனவின் ஆதரவுத்தளத்தை அசைக்க முடியாது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.



வாக்குகளைப் பிரிக்கும் நோக்குடனேயே இத்தனை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கும் அவர் தமது கட்சியின் வாக்காளர்கள் இதனால் நிலைகுலையப் போவதில்லையென தெரிவிக்கிறார்.

தமது வாக்காளர்களையும் பிரிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியும் நம்பிக்கை வெளியிட்டு வரும் அதேவேளை ஜே.வி.பி தரப்பு புதிய வாக்காளர்களைக் கவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் நடந்து முடிந்த எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் முதற்தடவையாக இரு ஆசனங்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment