ஹக்கீமை கைது செய்யுமாறு மிப்லால் குழு முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Friday 18 October 2019

ஹக்கீமை கைது செய்யுமாறு மிப்லால் குழு முறைப்பாடு


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டுப் பிரபலம் தேடி வரும் மிப்லால் எனும் நபரின் குழு.


கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் காத்தான்குடியில் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்ட சந்திப்பொன்றில் சஹ்ரானும் அமர்ந்திருப்பதை அடிப்படையாக வைத்தே இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஹக்கீமுக்கும் - சஹ்ரானுக்கும் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அப்பகுதியின் வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான சக்திகள் மு.கா தலைவருடன் மேற்கொண்ட சந்திப்பொன்றின் காணொளியே அது என விபரமறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்ற அதேவேளை சமூகத்தில் தொடர்ச்சியான சலசலப்புகளை உருவாக்க பேஸ்புக் ஊடாக காணொளிகளை வெளியிட்டு வரும் குழுவினரே இன்று இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment