
அண்மையிலேயே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து செய்தியாளர் சந்திப்பையும் நடாத்திய முன்னாள் பிரதியமைச்சர் W.B. ஏக்கநாயக்க, இன்று முதல் கோட்டாபே ராஜபக்சவை ஆதரிக்கப் போவதாக தெரிவித்து கோட்டாவின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச பதவி வெறி பிடித்தவர் என தீவிரமாக விமர்சனம் செய்து வந்த ஏக்கநாயக்கவே தற்போது திடீரென இவ்வாறு கட்சித் தாவல் மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் போது பரஸ்பரம் கட்சித் தாவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment