
போதை மாத்திரையுடன் பாடசாலை மாணவன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை(5) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வைத்து மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் உயர் தரம் கலைப்பிரிவில் கல்விபயிலும் 18 வயது மாணவனே இவ்வாறு கைதானார்.
மருதமுனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கைதான மாணவனிடம் இருந்து 1050 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மாணவனை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாரு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகளவான போதை பாவனை காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment