கோட்டாபே ராஜபக்சவுக்கு 2005ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் சட்ட விரோதமானது என நீதிமன்றில் இன்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இரட்டைக்குடியுரிமை சான்றிதழை வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு மாத்திரமே இருக்கும் நிலையில், அவ்வேளையில் குறித்த சான்றிதழில் மஹிந்த ராஜபக்ச கையொப்பமிட்டிருப்பதாகவும் அது சட்டவிரோதமானது எனவும் இவ்விவகாரம் தொடர்பில் வழக்குத் தொடர்ந்துள்ளவர்கள் ஆஜரான சட்டத்தரணி இன்றைய விசாரணையின் போது வாதிட்டிருந்தார்.
எனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி எனும் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவுக்கு அதற்கான அதிகாரம் இருந்ததாக பிரதி சட்டமா அதிபர் மன்றில் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், நாளைய தினம் வழக்கு விசாரணை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment