பிரேமதாசவின் பெயரை அவர்களால் அழிக்க முடியாமல் போய்விட்டது: ரணில் - sonakar.com

Post Top Ad

Thursday 10 October 2019

பிரேமதாசவின் பெயரை அவர்களால் அழிக்க முடியாமல் போய்விட்டது: ரணில்


ரணசிங்க பிரேமதாச உயிரோடு இருக்கும் போது அவரை மிக மோசமாக விமர்சித்து அரசியல் இலாபம் காண முற்பட்ட எதிரணி, அவர் இறந்த பின்னும் அவரது பெயரை இல்லொதொழிக்க வேண்டும் என மும்முரமாகக் கங்கணம் கட்டி இயங்கியது. எனினும், தற்போது 26 வருடங்களின் பின்னும் அவரது பெயர் தலை நிமிர்ந்து நிற்கிறது என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.



அக்காலத்தில் யாரெல்லாம் பிரேமதாசவின் பெயரை இல்லாதொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றார்களோ அவர்களே இன்று சஜித்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனாலும் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் இடமளியாது எனவும் ரணில் இன்றைய ஐக்கிய தேசியக் கட்சி பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.

தகுந்த நேரத்தில் சஜித்துக்கான அங்கீகாரத்தை ரணில் வழங்கியிருப்பதாகவே பெரும்பாலான கட்சி முக்கியஸ்தர்கள் தற்போது தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment