ஷவேந்திர சில்வாவுக்கு எந்த ஆபத்தும் வராது: சஜித் - sonakar.com

Post Top Ad

Sunday, 27 October 2019

ஷவேந்திர சில்வாவுக்கு எந்த ஆபத்தும் வராது: சஜித்தான் ஜனாதிபதியானால் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு எவ்வித ஆபத்துக்களும் வராமல் பாதுகாப்பது தனது பொறுப்பு என தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.தம்மால் மாத்திரமே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என கோட்டாபே தரப்பு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக்கப் போவதாகவும் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச தற்போது ஷவேந்திரவுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் பாதுகாப்பதும் தனது பொறுப்பென தெரிவித்துள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள ஷவேந்திரவின் நியமனம் ஐ.நா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்புகளை சந்தித்துள்ள நிலையில் இதனூடாக அவருக்கு ஆபத்துள்ளதாகவும் மஹிந்த தரப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையிலேயே சஜித் இவ்வாறு வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment