நாமல் ராஜபக்ச கல்முனை விஜயம் - sonakar.com

Post Top Ad

Tuesday 22 October 2019

நாமல் ராஜபக்ச கல்முனை விஜயம்


அம்பாறை மாவட்டத்திற்கு  ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தபாய ராஜபக்சவை  ஆதரித்து தேர்தல்   பரப்புரை  மேற்கொள்வதற்காக  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வருகை தந்துள்ளார்.


செவ்வாய்க்கிழமை (22)  காலை 11 மணியளவில்  நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுளில் ஈடுபட்ட பின்னர்   நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்  நாமல் ராஜபக்ச பங்குபற்றினார்.

இந்த நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்  சிறியாணி விஜேவிக்கிரம, அம்பாறை நகர முதல்வர் , கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment