கொலைகார யுகம் மீண்டும் வர வேண்டுமா? ராஜித கேள்வி! - sonakar.com

Post Top Ad

Thursday 10 October 2019

கொலைகார யுகம் மீண்டும் வர வேண்டுமா? ராஜித கேள்வி!


டி.ஐ.ஜி அநுர சேனாநாயக்கவினதோ அல்லது கைதான யாரினதும் பிள்ளைகள் வசீம் தாஜுதீனோடு ரகர் விளையாடவில்லை, விளையாடியவர்களே போட்டி பொறாமையால் கொலை செய்யச் சொன்னார்கள். ஊடகவியலாளர்களை அடுக்கடுக்காக கொலை செய்தார்கள்.ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த கடந்த நான்கரை வருடங்களில் அப்படி ஏதேனும் நடந்ததாக வரலாறு இருக்கிறதா? என கேள்வியெழுப்பியுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

காலிமுகத்திடலில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சஜித் பிரேமதாசவின் கன்னிப் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன் மீண்டும் கொலைகார யுகம் வர வேண்டுமா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment