ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சமய வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக கண்டி தலதா மாளிகை, கண்டி மீராம் மக்காம் பள்ளி வாசல், இந்து கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்று இன்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
கண்டி மீராமக்காம் பள்ளிவாசலுக்கு வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக மௌலவி ரிஸ்வான் அவர்களினால் விசேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம், அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனாசிங்க, இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மயன்த திசாநாயக, மீராம் மக்காம் பள்ளிவாசல் தலைவரும் கண்டி மாநகர சபை உறுப்பினருமான இலாஹி ஆப்தீன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஜெய்னுலாப்தீன் லாபீர், ஹிதாயத் சத்தார் , மாவத்தகம பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
-இக்பால் அலி, ராபி
No comments:
Post a Comment