கோட்டாபே ராஜபக்சவின் குடியுரிமை வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாமை தொடாபில் விளக்கமளித்துள்ளது மேன் முறையீட்டு நீதிமன்றம்.
குறித்த மனுவில் கோட்டாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட விதம் கேள்விக்குட்படுத்தப்பட்டமையினை நிராகரித்துள்ள நீதிமன்றம் அமைச்சரவை ஒன்றில்லாத நேரத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரம் உள்ளதென விளக்கமளித்துள்ளது. எனினும், ஜனாதிபதியாக இருப்பவர் பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டியவது அவரது கடமையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வழக்கின் மனு, விசாரணைக்கேற்ப வகையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை இணைத்து பதியப்படவில்லையென நீதிபதிகள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment