ஜனாதிபதி தேர்தல் பொதுத் தேர்தலுக்கான அங்கீகாரம்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Saturday, 26 October 2019

ஜனாதிபதி தேர்தல் பொதுத் தேர்தலுக்கான அங்கீகாரம்: மஹிந்த


ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு தாமதமின்றி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான அனுமதியையும் சேர்த்தே நவம்பர் 16ம் திகதி மக்கள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.தனது பிரச்சாரக் கூட்டங்களில் தான் இதனை வலியுறுத்தி வருவதாகவும், அந்த வகையில் தேர்தல் முடிவு அதற்கான அங்கீகாரமாகவும் இருக்கும் எனவும் மஹிந்த தெரிவிக்கிறார்.

நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல்நடாத்தப்படுவதோடு 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த வருடம் ஒக்டோபரிலும் அரசியல் சூழ்ச்சியூடாக மஹிந்த 52 தினங்கள் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருந்ததோடு அவசர அவசரமாக ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்களுக்கு அரசாங்கத்தில் தொழில் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment