
எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறையை ஆதாரங்காட்டி இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ச குடும்பம் மீண்டும் போட்டியிடும் நிலையில், இது தொடர்பில் இந்தியாவின் அவதானம் அதிகரித்திருப்பதாகவும் கோட்டாபே, சஜித் ஆகிய இருவருக்கான ஆதரவுத் தளமும் அதிகரித்திருப்பதாகவும் முக்கிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
2009 யுத்த நிறைவின் போது தமிழ் நாட்டில் உணர்வு ரீதியான போராட்டங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் அப்போது இந்திய அரசு அதனைக் கண்டு கொள்ளாது விட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment