கோட்டாவை ஆதரித்தால் தான் நிம்மதியாக வாழ முடியும்: பைசர் - sonakar.com

Post Top Ad

Sunday 13 October 2019

கோட்டாவை ஆதரித்தால் தான் நிம்மதியாக வாழ முடியும்: பைசர்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் கோட்டாவை ஆதரித்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் என தெரிவிக்கிறார் பைசர் முஸ்தபா.அம்பாறை மாட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளூராட்சி மன்ற பிரதிநிகளுடனான இன்றைய சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், சுதந்திரக் கட்சியும் பெரமுனவும் இணைந்துள்ள நிலையில் கோட்டாவின் வெற்றியில் முஸ்லிம்களும் பங்களிக்க வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.

சிறுபாண்மை சமூகத்தின் பலமில்லாமலேயே கோட்டா வெல்வது உறுதியென்பதால் இக்கால கட்டத்தில் கோட்டாவை ஆதரிப்பதே சிறந்த தெரிவெனவும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-இக்பால் அலிNo comments:

Post a Comment