கோட்டாவின் 'குடியுரிமை' வழக்கு: ஆறு மணிக்கு தீர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 4 October 2019

கோட்டாவின் 'குடியுரிமை' வழக்கு: ஆறு மணிக்கு தீர்ப்பு!


கோட்டாபே ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான வழக்கின் விசாரணை முடிவுற்றுள்ள நிலையில் மாலை 6 மணியளவில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.



பல காலமாக கேள்விக்குட்படுத்தப்பட்டு வரும் கோட்டாபே ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் நீதி மன்றின் தலையீட்டைக் கோரி இரு சமூக ஆர்வலர்களால் இவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், விசாரணைகள் - ஆவணங்களை பரிசோதித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் மாலை 6 மணியளவில் தீர்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment