காத்தான்குடி பக்கம் இருந்துதான் 'போட்டோக்கள்' வருகிறது: ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Tuesday 22 October 2019

காத்தான்குடி பக்கம் இருந்துதான் 'போட்டோக்கள்' வருகிறது: ஹக்கீம்ஈஸ்டர் தாக்குதலின் பின் ஏற்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கெதிரான இக்கட்டைத் தவிர்க்கவும் பாரிய சர்ச்சைகளை தணிக்கவும் எல்லோருமாக ஒன்றிணைந்து பதவிகளைத் துறந்த போதிலும் தற்போது தமக்கெதிரான தீவிர குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாகக் காட்டப்படும் போட்டோக்கள் காத்தான் குடி பக்கம் இருந்தே வெளியிடப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.கோட்டாபே ராஜபக்சவுக்கு முஸ்லிம்களின் வாக்குகளைப் 'பெற்றுக்' கொடுக்கும் தரகராகத் தாம் தனித்து போட்டியிடுவதாக தெரிவிக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் செயல் அற்பமானது என ரவுப் ஹக்கீம் விமர்சித்திருந்ததையடுத்தே இவ்வாறு அவருக்கு எதிரான போட்டோக்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே இன்று ஹக்கீம் இவ்வாறு தெரிவித்ததுடன் புதன் கிழமை இது தொடர்பில் நாடாளுமன்றிலும் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ரவுப் ஹக்கீமின் பேச்சடங்கிய காணொளி:

No comments:

Post a Comment