கோட்டாவை யாழ் நீதிமன்றுக்கு அழைப்பதற்குத் தொடர்ந்தும் தடை - sonakar.com

Post Top Ad

Thursday 31 October 2019

கோட்டாவை யாழ் நீதிமன்றுக்கு அழைப்பதற்குத் தொடர்ந்தும் தடை


கோட்டாபே ராஜபக்சவை யாழ். நீதிமன்றில் வழக்குக்கு ஆஜராக அழைப்பதற்கு டிசம்பர் 3ம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த இடைக்கால தடையை அகற்ற மறுத்துள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.



இவ்வாறான இடைக்காலத் தடை இரண்டு வாரங்களுக்கே வழங்க முடியும் எனவும் செப்டம்பர் 24ம் திகதியிலிருந்து டிசம்பர் 3ம் திகதி வரையான காலம் இவ்வாறு தடை விதிக்க மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அனுமதியில்லையெனவும் மனுதாரர் தரப்பில் விவாதிக்கப்பட்டது.

எனினும், அது மாவட்ட நீதிமன்றத்துக்கான வரையறையென தெரிவித்து இடைக்கால தடையை அகற்ற மறுத்துள்ளது நீதிமன்றம். தனக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ் நீதிமன்றுக்கு செல்ல கோட்டா மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment