வெல்கம மீண்டும் வருவார்: பசில் நம்பிக்கை - sonakar.com

Post Top Ad

Monday, 14 October 2019

வெல்கம மீண்டும் வருவார்: பசில் நம்பிக்கை


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆரம்ப காலந்தொட்டு பங்களித்த குமார வெல்கம மீண்டும் தமது தரப்போடு இணைந்து பணியாற்றுவார் என தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.



கோட்டாபே ராஜபக்சவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியே வெல்கம வெளியேறியிருந்த நிலையில் அவ்வாறு எண்ணம் கொண்டிருந்த பலர் பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் அது போன்றே வெல்கமவும் வருவார் எனவும் பசில் தெரிவிக்கிறார்.

சுயேட்சையாக போட்டியிடும் நோக்கில் கட்டுப்பணம் செலுத்திய போதும் வெல்கம வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment