கண்டி: மஹியாவ பகுதியில் சிறு அசம்பாவிதம் - sonakar.com

Post Top Ad

Thursday 24 October 2019

கண்டி: மஹியாவ பகுதியில் சிறு அசம்பாவிதம்


கண்டி, மஹியாவ பகுதியில் சிங்கள கடும்போக்குவாதிகளினால் முஸ்லிம் நபர் ஒருவர் தாக்கப்பட்டதையடுத்து பிரதேசத்தில் சிறு பதற்றம் நிலவியுள்ளது.சிறு வர்த்தகம் செய்து வந்த முஸ்லிம் நபர் ஒருவரிடம் கப்பம் கோரியதன் பின்னணியில் இச்சர்ச்சை உருவானதாகவும் தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை கடும்போக்குவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதேசத்தில் உடனடியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பொலிசார் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment