தற்கொலைத் தாக்குதல்தாரிகளான சஹ்ரான் மற்றும் ரிழ்வானுடன் தொடர்பிருந்ததாக தெரிவிக்கப்படும் ரவுப் ஹக்கீம் மீது விசாரணையொன்று நடாத்தப்படாது, அவர் பங்கேற்ற நாடாளுமன்ற அறிக்கை செல்லுபடியாகாது என தெரிவிக்கிறார் தினேஸ் குணவர்தன.
குறித்த அறிக்கை வெளியாவதற்கு தேதி குறிக்கப்பட்டிருந்த நிலையில் ரவுப் ஹக்கீமோடு குறித்த நபர்கள் காணப்படும் படங்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், குறித்த படங்கள் காத்தான்குடியிலிருந்தே வெளியிடப்பட்டுள்ளதாகவும் அக்காலத்தில் குறித்த நபர்கள் பயங்கரவாதிகளாக அறியப்பட்டிருக்கவில்லையெனவும் ஹக்கீம் தன்நிலை விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment