பெண் நிருபரிடம் கோட்டாவுக்குத் தலை குனிவு: ராஜித! - sonakar.com

Post Top Ad

Thursday 17 October 2019

பெண் நிருபரிடம் கோட்டாவுக்குத் தலை குனிவு: ராஜித!


செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்துவதாயின் கேள்வி கேட்பவர்களுக்கு அதற்குரிய பதிலைத் தரும் திராணியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வாறு ஏன் நடாத்துவது என கேள்வியெழுப்பியுள்ளார் ராஜித சேனாரத்ன.பெண் நிருபர் ஒருவர் பாதுகாப்பு பற்றி கேள்வி கேட்க, அதற்கு விடை சொல்லத் தெரியாமல் தலை குனிவை சந்தித்த கோட்டா அதற்குத் தன் அண்ணனிடம் பதிலைக் கேட்கிறார். பெரும்பாலான கேள்விகளுக்கு அண்ணனே பதில் சொல்ல வேண்டும் என்றால் எதற்காக இவர் ஜனாதிபதி வேட்பாளர்? அண்ணனையே நிறுத்தியிருக்கலாமே என்றும் ராஜித மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேபோன்று, யுத்த நிறைவு பற்றி கேள்வியெழுப்பப்பட்ட போது யுத்தத்தை நடாத்தியது தானில்லை இராணுவ தளபதியென்கிறார். ஆனால், மறு பக்கத்தில் யுத்தத்தை நிறைவு செய்தது தாமேயென அதற்கு உரிமையும் கோரும் கோமாளியாக மாறிவிட்டார் எனவும் ராஜித தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment