கோட்டாவை 'கொல்லச்' சொன்னேனா? பௌசி விசனம்! - sonakar.com

Post Top Ad

Friday, 25 October 2019

கோட்டாவை 'கொல்லச்' சொன்னேனா? பௌசி விசனம்!


பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவை கொலை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பௌசியின் பேச்சை திரிபு படுத்தி சிங்கள சமூக வலைத்தளப் பக்கங்களில் செய்யப்பட்டு வரும் பிரச்சாரத்தை மறுத்துள்ளார் பௌசி.ஹிரு தொலைக்காட்சியில் சர்ச்சையை உருவாக்கும் வகையில் நேற்றிரவு செய்தியில் பௌசியின் பேச்சு வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் கோட்டாவைத் தோற்கடிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்த கருத்தை கோட்டாவைக் கொல்ல வேண்டும் என்ற அர்த்தம் பட திரிபுபடுத்தி வெளியிடப்பட்டு வருகிறது.

பேச்சொலியை இவ்வாறு திரிபு படுத்தியுள்ளதன் பின்னணியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஏ.எச்.எம். பௌசி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment