24 மணி நேரம் கடந்து விட்டது; ஓடி ஒளிகிறார் கோட்டா: சஜித் - sonakar.com

Post Top Ad

Thursday, 24 October 2019

24 மணி நேரம் கடந்து விட்டது; ஓடி ஒளிகிறார் கோட்டா: சஜித்தன்னோடு நேரடியான விவாதம் ஒன்றில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து 24 மணி நேரமாகியும் பதில் தராது பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச ஓடி ஒளிவதாக விசனம் வெளியிட்டுள்ளார் சஜித் பிரேமதாச.ட்விட்டர் ஊடாக நேற்றைய தினம் இவ்வாறு விவாத அழைப்பை விடுத்திருந்த போதிலும் தற்போது 24 மணி நேரம் கடந்த நிலையில் கோட்டாபே ராஜபக்ச இன்னும் பதில் தரவில்லையெனவும் எந்தவொரு விடயத்துக்கும் அச்சமின்றி நேருக்கு நேர் இருந்து பேசக் கூடிய ஒருவரே இந்நாட்டுக்கு ஜனாதிபதியாக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கோட்டாபே ராஜபக்ச திணறியமை பாரிய விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment