கட்சியை விட்டு நீக்கியது செல்லுபடியாகாது: SB - sonakar.com

Post Top Ad

Sunday 15 September 2019

கட்சியை விட்டு நீக்கியது செல்லுபடியாகாது: SBஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுத் தம்மை நீக்கியது செல்லுபடியாகாது எனவும் அதற்கான அதிகாரம் செயலாளருக்கு இல்லையெனவும் தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.எஸ்.பி, பௌசி, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஸ்ரீலசுகட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் பின்னணியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள எஸ்.பி, மத்திய குழு கூடியே இவ்வாறு ஒரு முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கிறார்.

இதேவேளை, இத்தீர்மானத்துக்கு எதிராக வழக்காடப் போவதாகவும் தெரிவிக்கின்றமையும் எஸ்.பி, டிலான் போன்றோர் மஹிந்த அணியுடன் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment