ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக நம்பப்படுகிறது. எனினும், தொடரும் இழுபறியின் பின்னணியில் முக்கிய காரணங்கள் இரண்டு இருப்பதாக விளக்கமளித்துள்ளார் பாலித் ரங்கே பண்டார.
அவரது கூற்றுப்படி, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடி நால்வரின் பெயர் ஆலோசிக்கப்பட்டு வந்ததாகவும் இதில் யார் வென்றாலும், அவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே பிரதமரை நியமிக்க வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் எனினும் இதுவரை அந்த நபர் யார் என்பதை வேட்பாளர்கள் பகிரங்கப்படுத்தாதமை ஒரு காரணம் என தெரிவிக்கிறார்.
இன்னொரு காரணமாக அவர் தெரிவிப்பது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படக்கூடிய கௌரவம் அல்லது அவருக்கான பதவி குறித்த பேச்சுவார்த்தையெனவும் தெரிவிக்கிறார். சஜித் பிரேமதாச வேட்பாளரானால் யார் பிரதமர்? என்ற கேள்விக்கு விடை காணப்பட வேண்டும் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment