இனி மாகாண சபை தேர்தல் நடக்காது; ரணிலே காரணம்: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Tuesday 3 September 2019

இனி மாகாண சபை தேர்தல் நடக்காது; ரணிலே காரணம்: மைத்ரி!ரணில் விக்கிரமசிங்க செய்து வைத்திருக்கும் வேலையால் இனி மாகாண சபை தேர்தலே இந்நாட்டில் இடம்பெறாது என்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.இதேவேளை, அடுத்து யார் ஜனாதிபதியாக வந்தாலும் 19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக அவரால் பாதுகாப்பு அமைச்சராகக் கூட இருக்க முடியாது என மைத்ரி மேலும் தெரிவித்துள்ளதுடன் பிரதமருக்கே அனைத்து அதிகாரங்களும் உரித்தாகும் எனவும் தெரிவிக்கிறார். 

மாகாண சபை தேர்தல்களைப் பொறுத்த வரை இனி அது எப்போது நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லையெனவும் பிரதமர் தேவையான அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அதனை நடாத்த முடியாமல் போயுள்ளதாகவும் ரணில் இனியும் அதை செய்வார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லையெனவும் மைத்ரி இன்றைய சுதந்திரக் கட்சி மாநாட்டில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment