டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சினால் நாடு முழுவதிலும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நவீன கல்விக்கு மாணவர்களை தயார்படுத்தும் ஸ்மார்ட் கணனி நிலையம் இன்று காலை நிந்தவூர் கமு/அல்- மஸ்ஹர் பெண்கள் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது.
நிந்தவூர் கமு/அல்- மஸ்ஹர் பெண்கள் கல்லூரி அதிபர் எ.எல்.நிசாமுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான யு.கே ஆதம்லெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் அப்துல் றஹீம், ஐக்கிய தேசியக் கட்சியின் நிந்தவூர் பிரதேச இணைப்பாளர் எம்.றிபா உட்பட கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இங்கு அதிதிகளினால் ஸ்மார்ட் கணனி நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன் ஆசிரியர்களினால் விளக்கவுரையும் இடம்பெற்றது.
இச்செயற்திட்டத்தில் அம்பாரை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலை நிந்தவூர் கமு/அல்- மஸ்ஹர் பெண்கள் கல்லூரி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
-நூருல் ஹுதா உமர்
No comments:
Post a Comment