கல்வி அமைச்சிடம் நேரடியாக முறையிடுங்கள்: அகில - sonakar.com

Post Top Ad

Friday 13 September 2019

கல்வி அமைச்சிடம் நேரடியாக முறையிடுங்கள்: அகில


அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்ததின் நிர்மாணி பணிகளில் ஏதாவது முரண்பாடுகள், ஊழல் மற்றும் மோசடிகள், தரமற்ற நிர்மாண பணிகள் போன்ற விவகாரங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் ஏதும் இருப்பின் கல்வி அமைச்சின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் பிரதான செயற்திட்ட பொறியிலாளருக்கு குறித்த முறைப்பாட்டை வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.


கல்வி அமைச்சின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் பிரதான செயற்திட்ட பொறியிலாளரின் 0112786768 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டோ அல்லது பிரதான செயற்திட்ட பொறியிலாளர், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்ட அலுவலகம், 7 ஆம் மாடி ,இசுறுபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு குறித்த முறைப்பாட்டை அனுப்பி வைக்க முடியும்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டமானது 65,000 மில்லியன் ரூபா செலவில் 18,000 செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் ஊடாக 9064 பாடசாலைகள் பயனடைகின்றன. இதன் ஊடாக பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக 950 புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.No comments:

Post a Comment