ரணில் - சஜித் சந்திப்பு தள்ளிவைப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 8 September 2019

ரணில் - சஜித் சந்திப்பு தள்ளிவைப்பு



இன்றைய தினம் இடம்பெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளராகும் நம்பிக்கையில் செயற்பட்டு வரும் சஜித் பிரேமதாச இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.



அலரி மாளிகையில் இடம்பெறவிருந்த குறித்த சந்திப்பு, சஜித்தின் நிகழ்ச்சி நிரல்களிற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 10ம் திகதி செவ்வாய்க்கிழமை இருவரும் நேரடியாகச் சந்தித்து பேசுவார்கள் எனவும் கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment