மட்டக்களப்பு கம்பஸ் தனியார் கல்வி நிறுவன விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு நேற்றைய தினம் சமூகமளிக்கத் தவறிய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது புதல்வருக்கு மீண்டும் ஒக்டோபர் 9 அல்லது 10ம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தனியார் கல்வி நிறுவன நிதி விவகாரங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அதேவேளை ஹிஸ்புல்லாஹ் தனது அதிகார பலத்தைக் கொண்டு வங்கிக் கணக்குகளை ஆரம்பித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவருக்கு மீண்டும் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment