மாதம்பிட்டிய கொலை விவகாரத்தில் அண்மையில் கைதான நபர்களுள் பிரபல பாதாள உலக பேர்வழி குடு ரொஷானுடன் பெரமுன பிரதேச சபை உறுப்பினரும் உள்ளடக்கம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15ம் திகதி மாதம்பிட்டியில் வைத்து இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதிலேயே இவ்வாறு பெரமுன பிரதேச சபை உறுப்பினரும் உள்ளடக்கம் என பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஆனமாலு ரங்க என அறியப்படும் பாதாள உலக பேர்வழி கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment