தாமரைக் கோபுர ஊழலை 'கோப்' குழு விசாரிக்கும்: சுனில் - sonakar.com

Post Top Ad

Wednesday 18 September 2019

தாமரைக் கோபுர ஊழலை 'கோப்' குழு விசாரிக்கும்: சுனில்


தாமரைக் கோபுர நிர்மாணத்தின் ஆரம்ப கட்டத்திலேயே 200 கோடி ரூபா ஊழல் நடந்துள்ளதாக சந்தேகம் உருவாகியுள்ள நிலையில் அது குறித்து உடனடியாக கோப் குழு விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் தலைவர் சுனில் ஹந்துன்னெதி.


முற்பணமாக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாவைப் பெற்றுக்கொண்ட நிறுவனம் 2016ல் தேடிப் பார்த்த போது காணாமல் போய்விட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறப்புவிழாவின் போது தெரிவித்திருந்தார். இதன் பின்னணியிலேயே தற்போது இது பேசு பொருளாக மாறியுள்ளது.

இதேவேளை, குறித்த நிறுவனம் இருப்பதாகவும் வேறு நிறுவனம் ஒன்றுக்கே பணம் வழங்கப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ச விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment