மைத்ரிக்கு ஒரு போதும் பிரதமர் பதவி தர மாட்டோம்: மரிக்கார் - sonakar.com

Post Top Ad

Sunday 8 September 2019

மைத்ரிக்கு ஒரு போதும் பிரதமர் பதவி தர மாட்டோம்: மரிக்கார்ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைந்தால் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஒரு போதும் பிரதமர் பதவியைத் தரப் போவதில்லையென்கிறார் எஸ்.எம். மரிக்கார்.ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவும் மைத்ரிபாலவை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதுடன் தேவையானால் உதவிப் பிரதமர் எனும் பதவியை உருவாக்கித் தருவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.

எனினும், மீண்டும் மைத்ரிபால சிறிசேனவுடன் கூட்டணி சேரவோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கவோ ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இல்லையென மரிக்கார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment