எந்தக் கட்சிக்கும் தாவாது 'களுகங் தொட்ட சிங்கம்' என பெயரெடுத்துள்ள தான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரன் எனவும் எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் குமார வெல்கம.
சுதந்திரக் கட்சி இன்னும் இறுதித் தீர்மானம் ஒன்றை எட்டவில்லையாயினும், வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கியாக வேண்டும் என தொடர்ந்தும் அக்கட்சியோடு பயணிக்கும் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே தன்னைத் தேர்வு செய்யுமாறு குமார வெல்கம இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன போட்டியிடப் போவதில்லையெனும் நிலையில் பெரமுனவுக்கு ஆதரவளிப்பதற்கும் தயக்கம் அக்கட்சியில் தயக்கம் நிலவுகின்றமையும் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமாக அமைந்து விடும் என கணிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment