தனது குடும்பத்தில் தானே மிகவும் அப்பாவியான உறுப்பினர் என அண்மையில் பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச தெரிவித்தமை பற்றி விசனம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் மங்கள சமரவீர.
நல்லவன் என நினைப்பவன் எல்லாம் நல்லவனில்லையென தெரிவித்துள்ள அவர், தம்மைத் தாமே அவ்வாறு நினைத்துக் கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என Frankenstein ன் வரலாற்றை மேற்கோள் காட்டியுள்ளார்.
தன்னை சந்தித்த ஐ.நா அதிகாரியொருவர், நீங்கள் மிகவும் மோசமான குணம் படைத்தவர் என்று தான் நினைத்திருந்தேன், ஆனால் நேரடியாக சந்தித்த பின்னர் அவ்வாறு தோன்றவில்லையென தெரிவித்ததனை மேற்கொள் காட்டியே தானே குடும்பத்தில் அப்பாவி என கோட்டாபே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment